Adsense code

PF Withdrawal Rules: How to withdraw PF money


How to withdraw PF Amount Online in Simple Steps

Employees Provident Fund (ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி):

Employees Provident Fund என்பது ஒரு நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டமாகும்.

இது Provident Fund (வருங்கால வைப்பு நிதி) என்றும் குறிப்பிடப்படுகிறது, 

Employees Provident Fund விதிமுறைப்படி, ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் அடிப்படை ஊதியத்தில் 12% பங்களிக்க வேண்டும் மற்றும் பணிபுரியும் நிறுவனமும் அதே  தொகையை பங்களிக்கிறது.

மேலும், Employees Provident Fund கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ஆண்டு அடிப்படையில் வட்டியைப் பெறுகிறது.

பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெற்றதும் தங்கள் Employees Provident Fund(EPF) கணக்குகளில் இல் திரட்டப்பட்ட மொத்தத் தொகையையும் திரும்பப் பெறலாம். 

ஒரு சில அவசர தேவைகளுக்கு  டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே திரும்பப் பெறவும் முடியும்.

About Universal Account Number:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி  (Employees Provident Fund Organisation) என்ற அமைப்பு இதனை பராமரிக்கிறது.

இந்த அமைப்பு Universal Account Number (UAN) என்ற என்னை  ஒவ்வொரு பணிபுரியும் ஊழியருக்கும் ஒதுக்கியுள்ளது.

அதாவது, Provident Fund சட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) கட்டாயமாகும்.

இந்த UAN number ஊழியரின் EPF கணக்குடன் இணைக்கப்படும் மற்றும் ஒரு ஊழியரின் வாழ்நாள் முழுவதும் ஒரு UAN number போதுமானது. 

எனவே, ஒரு ஊழியர் தன்  பணியை மாற்றும் நேரத்தில் EPF account Transfer விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

EPF Withdrawal Rules 2020:

ஒருவர் EPF தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ திரும்பப் பெற முடியும். பின்வரும் சூழ்நிலையில் EPF ஐ திரும்பப் பெறலாம்:

a. ஒரு நபர் ஓய்வு பெறும்போது
b. ஒரு நபர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கும்போது.

1.மருத்துவ காரணங்கள்:

சுய மருத்துவ சிகிச்சை அல்லது மனைவி, குழந்தைகள் அல்லது பெற்றோரின் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு.

2.திருமணம்

சுய, மகன் / மகள் மற்றும் சகோதரர் / சகோதரியின் திருமண செலவுக்காக.

3. கல்வி

கணக்கு வைத்திருப்பவரின் கல்வி அல்லது குழந்தையின் கல்விக்காக.

4.நிலம் அல்லது வீடு வாங்க மற்றும் வீடு புதுப்பித்தல்

வீடு கணக்கு வைத்திருப்பவரின்  பெயரில் இருக்க வேண்டும் அல்லது வாழ்க்கைத் துணையுடன்(Spouse) கூட்டாக இருக்கலாம்.

5.ஓய்வு பெறுவதற்கு முன்

ஊழியர் 54 வயதை அடைந்ததும் மற்றும் ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குள் EPF தொகையை திரும்பப் பெறலாம்.

What is required to withdraw PF online

1. யுனிவர்சல் கணக்கு எண் (UAN) செயலில்(Active) இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தப்பட்ட மொபைல் எண் உபயோகத்தில் இருத்தல் வேண்டும்.

2.யுனிவர்சல் கணக்கு எண் (UAN) ஆனது PAN or Aadhar என்னுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

Steps to apply for EPF withdrawal online:

1. பின்வரும் லிங்க் கிளிக் செய்வதன் மூலம் UAN போர்ட்டலுக்குச் செல்லவும். 

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

2.உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்டு மூலம் உள்நுழையவும்.


3.‘Online Services’ Tab சென்று, கீழ் தோன்றும் மெனுவிலிருந்து ‘உரிமைகோரல் (Claim (Form-31, 19 & 10C))’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


4.Claim Page யில் KYC விவரங்கள் மற்றும் பிற சேவை விவரங்களைக் காண்பிக்கும். உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிட்டு, ‘Verify’ என்பதைக் கிளிக் செய்க.



5.நிறுவனத்தின் சான்றிதழில் கையொப்பமிட ‘Yes’ என்பதைக் கிளிக் செய்து தொடரவும்.


6.இப்போது ​​‘Proceed for Online claim’ என்பதைக் கிளிக் செய்யவும்.

7.பின்னர், உங்கள் நிதியைத் திரும்பப் பெற ‘PF Advance (Form 31)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மேலும் நோக்கம், தேவையான தொகை மற்றும் பணியாளரின் முகவரி ஆகியவற்றை உள்ளிடவும்.

8.சான்றிதழைக் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்த நோக்கத்திற்காக ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்கப்படலாம்.


உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கபட்ட பின்னர் உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுவீர்கள். பொதுவாக, பணம் வங்கிக் கணக்கில் credit ஆக 15-20 நாட்கள் ஆகும்.


Post a Comment

0 Comments