Adsense code

CSK vs MI IPL 2020 first match today

 CSK vs MI IPL 2020 today update



CSK vs MI IPL 2020 today update













Image credit: medium.com

கொரோனா நோய் தொற்று காரணமாக 2020 வருடத்தின் IPL Season நடக்குமா நடக்காதா என்ற கவலையில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முதல் happy moments என்றே சொல்லலாம்.

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் IPL 2020 கொண்டாட்டத்துக்குத் தயாராக உள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக UAE (
ஐக்கிய அரபு அமீரகம்) நாட்டில் அனைத்து போட்டிகளும் நடைபெறுகின்றன.

ரசிகர்கள் சுற்றி இல்லாத மைதானத்தில் போட்டி நடப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த ஆண்டு வித்தியாசமாக கொண்டாட உள்ளனர்.

ஆனாலும் கிரிக்கெட் வீரர்கள் எப்பொழுதும் போல் வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன் விளையாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இன்று தொடங்கும் IPL 2020 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும்
சென்னை அணியும் மோத உள்ளன.

முதல் போட்டி அபுதாபியில் ஷேக் சையது மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (September 19) இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த சிறந்த அணிகளும் முதல் போட்டியிலேயே மோதுவதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

Dhoni - Rohit எதிரெதிரே விளையாடும் இந்த போட்டி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கு நிகராக கருதப்படுகிறது.

இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் IPL Season விளையாட்டில் மட்டுமே தோனியின் ஆட்டத்தை ரசிக்க முடியும் என்பதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

மேலும், இந்த அணிகள் தான் சென்ற ஆண்டின் இறுதி போட்டியில் மோதியதால் இன்று நடைபெறும் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்கள் மட்டும் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் போன்ற பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments